Sunday, 30 October 2016

தீபாவளி

தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை அளித்து வந்த நரகாசுரனை, மகாவிஷ்ணு, சத்யபாமையுடன் இணைந்து வதம் செய்தார். இறக்கும் தருவாயில் தான் இறக்கும் நாளை மக்கள் அனைவரும் நல்ல நாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டியதன் படியே தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து வழிபடுவதற்கு பெயர் ‘தீபாவளி’ ஆகும். ஆவளி என்றால் வரிசை என்று பொருள். இந்தியாவில் மட்டுமல்லாமல், கடல் கடந்தும் கூட தீபாவளி பண்டிகை கொண்டாடப்படு கிறது. இதிகாச புராணங்களில் விவரிக்கப்படும் தீபாவளி, வரலாற்று ரீதியான தீபாவளி என பல தகவல்கள் தீபாவளி கொண்டாடுவது பற்றி சொல்லப்படுகிறது. அவற்றில் சில தீபாவளிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ராமாயண தீபாவளி

ராவணனை வதம் செய்ததும், ராமபிரான் சீதாராமனாக அயோத்தி வந்து சேர்ந்தார். அவர் அயோத்தி வந்த நேரம் அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளுக்குப் பிறகு ராமரை தரிசிக்க காத்திருந்த அயோத்தி மக்கள், அவரை வரவேற்கும் விதமாக, இரவு நேரத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து காத்திருந்தனர். அதே போல் சீதையும், ராமரும் அரண்மனைக்குள் நுழைந்ததும், அரண்மனை முழுவதும் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தார்கள். அந்த நாளே தீபாவளி என்று போற்றப்படுகிறது.

சீக்கிய தீபாவளி

ஜஹாங்கீர் என்ற மன்னன் 52 ராஜபுத்திர அரசர் களையும், சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் என்பவரையும் சிறையில் அடைத்தான். ஆனால் குரு கோவிந்தசிங் தன்னுடைய தனித் திறமையால், சிறையில் இருந்து தப்பினார். தன்னுடன் இருந்த ராஜபுத்திர அரசர்கள் 52 பேரையும் தப்பிக்க வைத்தார். சிறையில் இருந்து மீண்டு வந்த அனை வருக்கும், ஏராளமான தீபங்களை ஏற்றிவைத்து பொற்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்தனர். அந்த நாள்தான் தீபாவளி என்று கூறப் படுகிறது.

வாமன தீபாவளி

கருவில் இருக்கும் போத நாராயணரின் நாமத்தைக் கேட்டதன் பயனாக, சிறந்த விஷ்ணு பக்தனாக வளர்ந்தவர் பிரகலாதன். பக்திக்காக தனது தந்தையான இரண்யகசிபுவையே எதிர்த்தவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரகலாதனின் பேரன்தான் மகாபலி சக்கரவர்த்தி. அந்த மகாபலி சக்கரவர்த்தி முடிசூட்டிக் கொண்ட நாளே ‘தீபாவளி’ என்று கொண்டாடுபவர் களும் உண்டு. அன்றைய தினம் ஏற்றப்படும் தீபம் ‘எமதீபம்’ என்று அழைக்கப்படுகிறது. வாமன அவதாரம் எடுத்த நாராயணர், மகாபலிக்கு அருள்புரிந்து அவருக்கு ஞான திருவ(மு)டி சூட்டிய நாள் தீபாவளி என்பவர்களும் உண்டு.

ஜைன தீபாவளி

ஜைன மதத்தவர்களின் குருவான வர்த்தமான மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஞான ஒளியான மகாவீரர் மறைந்த தினத்தில், தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள்.

தாய்லாந்து தீபாவளி

‘லாய் கரடாங்க்’ (Loy Karatong), இது தான் தாய்லாந்தில் கொண்டாடப்படும் தீபாவளியின் பெயர். அன்றைய தினம் வாழை இலையால் செய்யப்பட்ட இலைக் கிண்ணத்தில் ஒரு மெழுகுவர்த்தியையும், ஊதுவத்தியையும் ஏற்றிவைத்து, அத்துடன் ரூபாய் நோட்டுகளையும் போட்டு நீரில் மிதக்க விடுவார்கள். மக்களின் வாழ்வில் ஒளியும், மணமும் வீசுவதுடன், செல்வமும் சேர வேண்டும் என்பது இந்த விழாவின் நோக்கமாகும்.

சீனத் தீபாவளி

சீனாவில் கொண்டாடப்படும் தீபாவளியில் கூட தீபங்களே முதன்மை பெறுகின்றன. அவர்கள் தீபாவளி அன்று விளக்குகளை வரிசையாக ஏற்றிவைப்பதோடு, தங்களின் வீட்டுக் கதவுகளில் ‘நன்றாக வாழ்’, ‘வளமை பெருகட்டும்’ என்பது போன்ற நல்ல வாசகங்களை எழுதி வைக்கிறார்கள். சீனாவில் நடை பெறும் தீபாவளி தினத்தன்றுதான், அங்குள்ளவர்கள் புதுக்கணக்கு தொடங்குகிறார்கள் என்பது சிறப்புத் தகவல்.

ஜப்பான் தீபாவளி

தீபாவளியை ஜப்பானிய மொழியில் ‘டோரோனாகாஷி’ (Toronakashi) என்று அழைக்கிறார்கள். முன்னோர்களை வழிபடும் விழாவாகவும், அவர்களின் ஆசியைப் பெறும் விழாவாகவும், இதனை ஜப்பான் நாட்டினர் கொண்டாடுகின்றனர். விளக்குகளை ஏற்றி வைத்து முன்னோர்களை வரவேற்கும் வழிபாடு இது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட தீபாவளி ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Monday, 17 October 2016

விவசாயம்

மகனே......நீ மண்வெட்டியை எடுத்துவிடதே.....
இந்தஉலகம் உன்னை மடையன் என்று கூறிவிடும்....!!!
மகனே......நீ ஏர் கலப்பை ஏந்திவிடதே......
இந்தஉலகம் உன்னை ஏமாளி என்று கூறிவிடும்....!!!
மகனே....... நீ கோவனம் கட்டிவிடதே.....
இந்த உலகம் உன்னை பிச்சைக்காரன் என்று கூறிவிடும்....!!!
மகனே......நீ விவசாயின் மகன் என்று கூறிவிடாதே.....
இவ்வுலகம் உன்னை விரட்டிஅடிக்க கூடும்....!!!
மகனே....கடைசியாக ஒன்றுகூறுகிறேன்....
இனிமேல் விவசாயத்தை உன்குடும்ப பசிக்கா மட்டும் செய்...ஊருக்காக இனி விவசாயம் செய்து விடாதே.... பிறகு
இவ்வுலகமே உன் காலில் விழும்

Sunday, 16 October 2016

ரூபா மதிப்பு

கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து,

ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து ,

ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு

ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்

பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு,

மேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு

ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு, நோக்கியா போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,

ரேபான் கண்ணாடியையை அணிந்து, வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,

சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,

ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி ,

மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,

மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,

குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,

நண்பர்களோடு அமர்ந்து  கேட்டான்

 #இந்தியன்

"ரூபா மதிப்பு ஏன்டா மாப்ள  குறைஞ்சி போச்சி?"


யோசிக்க வேண்டிய விஷயம்.

அஷ்டமி

*அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள்*

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.

எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.

உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன்.

அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன்.

நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமி யிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்?

நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?

அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன்.

சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன்.

என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள்.

க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசை யிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம்.

அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?

இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம்.

பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம்.

அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A Good One For Superstitious People" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது.

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"

அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள்.

அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று.

மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள்.

பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள்.

ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

Thursday, 13 October 2016

A.Pandian

சுற்றுச்சூழலைக் காப்போம்! சுகமாய் வாழ்வோம்!


அறிவியல் யுகத்தில் காலச்சக்கரம் கடுமையாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறது, உலகம் உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. கூடவே நம் சூழலும் பாலாகியிருக்கிறது. நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்திருக்கிற பெருமை நம்மையே சாரும். உலகம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. கமழி அடுக்கு(ஓசோன் மண்டலம்)மெல்லியதாகிப் போகியிருக்கிறது, சுத்தமான காற்றுக்கு ஆக்ஸிஜன் செண்டருக்கு அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம், துருவப்பணி பாறைகளெல்லாம் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.நெகிழியைப் பயன்படுத்தி பற்பல நோய்களோடு இலவசமாக இணைந்திருக்கிறோம். இயற்கையைக் காக்க தவறியிருக்கிறோம். இனி மேலும் விழித்துக் கொள்ளா விட்டால் அடுத்த தலைமுறை தான் என்னவாகுவது?.

பருவகால மாற்றத்திற்கு 99 சதவீதம் மனிதச் செயல்பாடுகள் தான் என்று ஆணித்தரமாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பசுமைப் புரட்சி தொடங்கி ஒரு பக்கம் தன்னிறைவைப் பெற்றுத் தந்தாலும் மறுபக்கம் சுற்றுச்சூழலில் மாசுக்களை உற்பத்தி செய்திருக்கின்றன. கரியமில வாயுக்கள் அதிகமாக கலப்பதினால் தான் வளிமண்டலம் வெப்பமாகியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் கடலில் பவளப்பாறைகள் முதற்கொண்டு அழிந்திருக்கின்றன. கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.

பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே நிறுவனம் ஆய்வு நடத்தியதில் காற்றில் கார்பன் - டை -ஆக்சைடு அளவு உயரும் போது அண்டார்டிக் கடல் பகுதியில் 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகுவது தெரிய வந்துள்ளது. இதனால் கடல்நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு கடல் நீர் அளவு உயரும் போது கடற்கரை நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்-கோ உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.

சர்வதேச அரசியல் நாடகம்
உலக வெப்பமாயதலில் வளர்ந்த நாடுகளின் பங்கு தான் அதிகமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆனால் உலகை மாசுபடுத்துவதில் அவர்களின் பங்கு 50 சதவீதமாக இருக்கிறது. பெருமளவு கரியமில வாயுக்களை அவர்களது தொழிற்சாலைகளே உமிழ்கின்றன. உலகம் வெப்பமாகுவதைத் தடுக்க வளர்ந்த நாடுகள் கிளீன் நுட்பத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதில் சர்வதேச அரசியல் அரங்கேறுகிறது. சுற்றுச்சூழல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் வளர்ந்த நாடுகள் தனது உற்பத்தி பாதித்து பொருளாதாரம் பாதிக்கும் என்பதால் அவ்வொப்பந்தைகளைப் பெயரளவில் வைத்துக் கொள்கிறார்கள்.

மாற்று வழி தேவை
உலகம் வெப்பமயமாதலில் தொழிற்சாலை, வாகனப்புகை தான் அதிக பங்கு வகிக்கிறது. அவைகளிலிருந்து வெளிவரும் வாயுக்களே வெப்பத்தை அதிகரிக்கின்றன. வெளியேறும் வாயுக்களைக் கட்டுப்படுத்தவும், வடிகட்டவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியலாம். இயற்கை விவசாயம், தொழில் நுட்பங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். கார்பன் மோனாக்சைடை உறிஞ்சிக் கொள்ளும் கேரட் வகைகளை அதிகமாக பயிரடலாம். ஜெர்மனியில் நடைமுறையில் இருக்கும் வாயு குளிர்விப்பான் குளங்களை நாமும் அமைக்கலாம்.

நெகிழி எனும் அரக்கன்
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் நெகிழியின் சராசரி பயன்பாட்டு நேரம் வெறும் 12 நிமிடங்கள். ஆனால் அதன் வாழ்நாள் 1000 ஆண்டுகள் என்பதை பிரமிக்க வைக்கிறது, அவைகளைப் பயன்படுத்தினாலும் தீங்கு எரித்தாலும் தீங்கு. சுவாசக் கோளாறு, உணவு மண்டல பாதிப்பு, ஒவ்வாமை இவ்வாறாக புற்றுநோய் வரை இவை தோற்றுவிக்கும் நோய்கள் ஏராளம்.

நெகிழியை மக்களாகிய நாம் பயன்படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். நெகிழி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விட்டு அதற்கு மாற்றான வேறு தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவது அரசின் கடமை.